அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஒரே நாடு ஒரே தேர்தல் முறை எப்படி நடைமுறைக்கு வரும் என்பது தெரியாத நிலையில் அது வரும்போதுதான் அதைப் பற்றி புரியும். மத்திய அரசு அதிமுகவை அழிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. தமிழகத்தில் அதிமுக பலமாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறது அதுவும் ஒன்றுபட்ட அதிமுகவாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறது. எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவில் பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதால் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு அதிமுக இருக்குமா? என்ற சந்தேகம் வந்துள்ளது.

சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெறுவோம் என்று கூறுவது நம்பிக்கையுடன் கூறுவது போல் தெரியவில்லை மூடநம்பிக்கையாக பேசுவது போல் தோன்றுகிறது. அவருடைய செயல்பாடுகள் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் பிற கட்சிகளுக்கு தான் பலனாக அமையும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பல கட்சிகள் வர இருப்பதால் கண்டிப்பாக அதிமுகவும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரவேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற கூட்டணி ஆட்சியை அமைக்கும். இதற்கு அதிமுக பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும். அதிமுக பாஜக கூட்டணிக்கு வந்தால் நான் ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்கிறேன். மேலும் திமுகவை வீழ்த்த பாஜக கூட்டணிக்கு அதிமுக வரவேண்டும் என்று கூறினார்.