தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் கே. சந்திரசேகர் ராவ். இவர் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது தேசிய பெரிய கட்சியை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் முதல்வர் கே.‌ சந்திரசேகர் ராவின் மகனும் தெலுங்கானா அமைச்சருமான கே.டி. ராமராவ் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பாஜக அரசு ஆந்திர மாநிலத்திற்கு எந்த ஒரு புதிய நிறுவனத்தையும் நிதியையும் அறிவிக்கவில்லை.

ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை கூட பாஜக அரசு நிறைவேற்றவில்லை. பாதாளம் நோக்கி ரூபாயின் மதிப்பு செல்ல கடன் விண்ணை நோக்கி செல்கிறது. தற்போது மத்திய நாளும் இந்த அரசாங்கம் அவர்களுடைய கார்ப்பரேட் நண்பர்களுக்கு தான் கடன்களை தள்ளுபடி செய்கிறது. மாநிலங்களில் பாஜகவில் இருப்பவர்கள் பெரியதாக பேசுகிறார்கள். அவர்களுக்கு தைரியம் இருந்தால் நாடாளுமன்றத்தை கலைத்து விடுங்கள். மேலும் நாம் முன்கூட்டியே தேர்தலை சந்திக்கலாம் என்று சவால் விட்டுள்ளார்.