பாஜகவில் இன்று சேர உள்ளதாக வெளியான தகவலுக்கு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி மறுப்பு தெரிவித்துள்ளார். பாஜகவில் இணைவீர்களா? என்ற கேள்விக்கு இன்று சேர வாய்ப்பு இல்லை என விஜயதரணி மழுப்பல் பதில் அளித்துள்ளார். பாஜகவில் சேர உள்ளதாக வெளியான தகவலை திட்டவட்டமாக கன்னியாகுமரி விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி மறுக்கவில்லை. பாஜக தேசிய குழு கூட்டம் இன்று தொடங்கும் நிலையில் விஜய தரணி பாஜகவில் சேர்வார் என தகவல் வெளியாகி இருந்தது. திருப்பூர் பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பாஜக நிகழ்ச்சியில் விஜய தரணி பாஜகவில் சேர்வார் என தகவல் வெளியாகியுள்ளது.