மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா நகர் தொகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மஹூவா மொய்த்ரா களம் இறங்கினார். இவர் தற்போது 4,85,079 வாக்குகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அமித்ரா ராயை விட 40,684 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் பாஜகவால் எம்பி பதவியை இழந்த மஹூவா மொய்த்ரா தேர்தலில் வெற்றி பெற்றது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.