நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஒரு வித்தியாசமான ஐடியாவைக் கொடுத்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், “வெப்ப அலையிலிருந்து தப்பிக்க உங்கள் பாக்கெட்டில் எப்போதும் ஒரு வெங்காயத்தை வைத்துக்கொள்ளுங்கள்.

இது நம் முன்னோர்கள் பயன்படுத்திய ரகசியம், இதைச் செய்தால் வெயிலால் உங்களுக்குப் பாதிப்பு ஏற்படாது” என்று தெரிவித்துள்ளார். மேலும், வெயில் அதிகமாக இருந்தாலும் தான் காரில் செல்லும்போது ஏசியை (AC) பயன்படுத்துவதில்லை என்றும், இயற்கையான முறையிலேயே வெப்பத்தை எதிர்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். அமைச்சரின் இந்த “வெங்காய டிப்ஸ்” தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.