
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக கூறப்பட்டதால் அவர்களுக்கு எதிராக இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
குறிப்பாக சிந்து நதிநீரை நிறுத்தியதோடு வேறு சில முக்கிய நதிகளையும் நிறுத்தியது. அதுமட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தான் நாட்டவர்களையும் வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்திய ராணுவம் தற்போது ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது இந்திய ராணுவம் முன்னதாக எக்ஸ் பக்கத்தில் தாக்குவதற்கு தயார் வெற்றி பெறுவதற்கு தயார் என்று பதிவிடப்பட்டிருந்த நிலையில் தற்போது நீதி கிடைத்துவிட்டது ஜெய்ஹிந்த் என்ற பதிவிட்டுள்ளது.
அதன்படி பாகிஸ்தானில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர், முசாஃபாரத், கோட்லி பற்றும் பகல்பூரின் முகமது கிழக்கு பகுதி உட்பட 9 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 17 பயங்கரவாதிகள் உயிரிழந்த நிலையில் 60 பேர் காயமடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் இது பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் கிடையாது எனவும் வெறும் பயங்கரவாதிகளை மட்டும் குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் இதனை பாகிஸ்தான் ராணுவமும் உறுதிப்படுத்தியுள்ளது.
மேற்கண்ட பாகிஸ்தானில் உள்ள மூன்று இடங்களிலும் இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார். மேலும் இந்த ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி இன்று காலை 10 மணிக்கு பாதுகாப்பு அமைச்சகம் விரிவான விளக்கம் கொடுப்பதாக அறிவித்துள்ளது.