பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் 3 தசாப்தங்களாக பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ததாகவும் அவர்களுக்கு நிதி வழங்கி வந்ததாகவும் ஒப்புக்கொண்ட நிலையில் மேற்கத்திய நாடுகளுக்காக தான் அப்படி செய்ததாகவும் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த நாட்டின் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் ஆதரித்ததால் அதனால் விளைவுகளை சந்தித்ததாகவும் அதிலிருந்து பாடங்களை கற்றுக் கொண்டதாகவும் கூறி பரப்பரப்பை கிளப்பியுள்ளார்.

 

இவர் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் இந்த உண்மையை ஒப்புக்கொண்டார். இது குறித்து அவர் தொடர்ந்து கூறியதாவது, பாகிஸ்தானை பொறுத்தவரையில் கடந்த காலம் என்பது ஒரு ரகசியம் என்று நான் நினைக்கவில்லை. தீவிரவாதத்தை அலை அலையாக கடந்து வந்ததால் பாகிஸ்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை ஆதரித்ததால்  பெறும் பிரச்சனைகளை சந்தித்ததோம் என்று கூறியுள்ளார். மேலும் இதற்கு முன்பாக சிந்து நதிநீரை நிறுத்தியதால் அங்கு இந்தியர்களின் ரத்தம் தான் பாயும் என்று இவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கதாகும்.