
சாம்பியன்ஸ் டிராபியின் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தான் அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய நியூஸிலாந்து அணியில் இரண்டு பேர் சதம் அடித்தார்கள். ஓபனர் வில் யங் 107 (113), டாம் லேதம் 118 (104) இருவரும் சதம் அடித்த நிலையில், கிளென் பிலிப்ஸ் 61 (39) ரன்களை எடுத்தார். இதனால் நியூசிலாந்து அணியானது 50 ஓவர்களின் முடிவில் 320/5 ரன்களை குவித்தது. இலக்கை துரத்திக் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், பாபர் அசாம் 64 (90), குஷ்டில் ஷா 69 (49) ஆகியோர் மட்டுமே அரை சதம் அடித்தார்கள். பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து தடுப்பாட்டத்தில் ஆட மட்டுமே கவனம் செலுத்தி, ஆட்டமிழந்தார்கள். இதனால், பாகிஸ்தான் அணியானது 47.2 ஓவர்கள் முடிவில் 260/10 ரன்களை மட்டும் எடுத்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணி என்ன காரணத்திற்காக தோற்றது என்பது குறித்து பார்க்கலாம். நியூசிலாந் அணியானது 43 ஓவர்களில் 224 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த இரண்டு ஓவர்களில் 32 ரன்களை விட்டுக் கொடுத்த பாகிஸ்தான் அணியானது கடைசி ஏழு ஓவர்களில் மட்டுமே 96 ரன்களை விட்டுக்கொடுத்து. இது தான் முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று நினைத்து பாகிஸ்தான் அணி முதல் 25 ஓவர்களை மிகவும் மெதுவாகவே விளையாடியது. தடுப்பாட்டத்தில் மட்டும் தான் கவனத்தை செலுத்தினார்கள்.
ஆனால் 21 ஓவர்களுக்கு பிறகும் பணியின் தாக்கம் பெரிய அளவில் இல்லை . அதன் பிறகு அதிரடியாக இறங்கி விளையாட முற்பட்டு விக்கெட் பறிகொடுத்தார்கள். இதில் 40 ரன்கள் அடித்திருந்தால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்திருக்கும். பாகிஸ்தான் அணியில் இருக்கும் பெரிய பிரச்சினை என்னவென்றால் பௌலர்கள் தான். ஷாஹீப் அப்ரீதி, நஷிம் ஷா, ஹரிஸ் ரௌப் போன்றவர்களால் அப்படி சிறப்பாக பந்து வீச முடியவில்லை. இந்த மூன்று பேரும் சமீப காலமாக அதிக ரன்களை விட்டுக் கொடுத்து வருகிறார்கள். இதுதான் இந்த அணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.