
இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் என்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த தேர்தலில் பல்வேறு நடிகர்கள் போட்டியிட்டனர். ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஹிந்துப்பூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் பாலகிருஷ்ணா 31,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மூன்றாவது முறையாக இவர் எம்எல்ஏ ஆகிறார்.
நடிகர் பவன் கல்யாண் எம்எல்ஏ தேர்தலில் 70 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்ற நிலையில் ஜனசேனா கட்சியும் போட்டியிட்ட எல்லா தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
நடிகை கங்கனா ரணாவத் பாஜக சார்பில் இமாச்சலப் பிரதேசத்தில் போட்டியிட்ட நிலையில் அதிக வாக்குகள் பெற்ற வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னுடைய அம்மாவிடம் ஆசை பெற்ற புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதனைப் போலவே மலையாள நடிகர் சுரேஷ் கோபி கேரளாவில் எம்பி தேர்தலில் முன்னிலை வகித்து வரும் நிலையில் கிட்டத்தட்ட இவரது வெற்றியும் உறுதியாகி உள்ளது.