பிரபல மலையாள நடிகை பேபி கிரிஜா. இவர் ஜீவிதா நவுகா என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து அச்சன், விஷப் பிண்டே விலி, பிரேமலேகா, அவன் வரன்னு, புத்திர தர்மம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்தார்‌.

இவருடைய கணவர் முன்பு இறந்துவிட்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் பழம்பெரும் நடிகையான கிரிஜா நேற்று சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது தற்போது 82. மேலும் அவருடைய மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.