தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருகிற 27-ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கும் நிலையில், 6,000 பக்தர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். இந்நிலையில் பழனி கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள இலவச ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 51,295 பக்தர்கள் விண்ணப்பித்தனர்.

இதில் 2000 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுடைய செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வருகிற 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை பழனி கோவில் தேவஸ்தான அலுவலகத்தில் நேரில் சென்று தங்களுக்கு வந்த குறுஞ்செய்தியை காண்பித்து சாமி தரிசனம் செய்து கொள்ளலாம். மேலும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மலையடிவாரத்தில் அதிக அளவில் கூட்டம் கூடும் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.