
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்தப்பட்டு ரொக்க பரிசுகள் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் தமிழ் மொழியை அழகாக எழுதி வருவோரை ஊக்குவிப்பதற்கு அதன் அடிப்படையில் பிற மாணவர்களுக்கு தமிழில் அழகாக எழுதும் ஆர்வத்தை ஏற்படுத்தவும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்து போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கையெழுத்து போட்டிகள் நடத்தப்பட்டு முதல் பரிசாக 3 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 2000 ரூபாய் மற்றும் மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அதனைப் போலவே 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முதல் பரிசு நான்காயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு 3000 ரூபாய் மற்றும் மூன்றாம் பரிசு 2000 ரூபாய் வழங்கப்படும். ஜூலை 31ஆம் தேதிக்குள் தமிழக முழுவதும் போட்டிகளை நடத்தி முடிக்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.