நாடு முழுவதும் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அனைத்து மாநிலங்களிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நடந்து முடிந்தது. இந்த பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டும் விதமாக மாநில அரசுகள் பல பரிசுகள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகின்றன. அதன்படி மத்திய பிரதேசம் மாநிலத்தில் பன்னிரண்டாம் வகுப்பில் 70% மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதே சமயம் லேப்டாப் மற்றும் கணினி வாங்குவதற்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் முதல்வரின் கற்றல் -சம்பாதித்தல் திட்டம் வருகின்ற ஜூலை மாதம் முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன்களை கற்பிக்கும் நோக்கத்தில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.