வழக்கமாக வெளிநாடுகளுக்கு சென்று கிரெடிட் கார்டின் வாயிலாக அங்கு செலவு செய்தால் இந்த செய்தி உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். கிரெடிட் பயன்படுத்துபவர்களுக்கு அரசு பெரும் நிவாரணம் அளித்திருக்கிறது. இதற்கு முன் அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி, ஜூலை 1 முதல் வெளிநாட்டில் கிரெடிட்கார்டு பயன்படுத்தி செய்யும் செலவுகளுக்கு டிசிஎஸ் கட்டணம் விதிக்கும் விதிமுறை அமலாக இருந்தது. அந்த வகையில் கிரெடிட் கார்டு வாயிலாக வெளிநாட்டில் 7 லட்சம் (அ) அதற்கு அதிகமாக செலவு செய்தால் 20% டிசிஎஸ் வரி செலுத்தவேண்டும்.

எனினும் தற்போது அரசு இந்த விதிமுறையை அமல்படுத்துவதை 3 மாதங்களுக்கு தள்ளிவைத்துள்ளது. பணம் அனுப்புதல் திட்டத்தின் (LRS) கீழ் பயண செலவுகள் உள்பட வெளிநாடுகளுக்கு இந்தியாவிலிருந்து அனுப்பும் பணத்தின் மீது 20 சதவீதம் என்ற விகிதத்தில் கழிக்கப்பட்ட வரியை(TCS) அமல்படுத்துவதை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க முடிவுசெய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி, இந்த விதி அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும்