மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அரசு பள்ளியில் ஒரு 16 வயது மாணவி படித்து வருகிறார். இந்த மாணவி 11ஆம் வகுப்பு படிக்கும் நிலையில் அதே பள்ளியில் ஒரு 16 வயது மாணவனும் படித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். இந்நிலையில் திடீரென மாணவிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் 6 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறினர். இதைக்கேட்டதும் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்த நிலையில் பின்னர் மாணவியிடம் விசாரித்தனர். அப்போது மாணவியின் கர்ப்பத்திற்கு சக மாணவன் தான் காரணம் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து மாணவனை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.