பிறப்பு சான்றிதழை ஒரே ஆவணமாக பயன்படுத்தும் நடைமுறை, வரும் அக். 1 முதல் அமலுக்கு வருகிறது. பள்ளி, கல்லூரி சேர்க்கை முதல் பணி நியமனம் வரை அனைத்திற்கும் ஒரு நபரின் பிறந்த தேதி, பிறந்த இடத்தை நிரூபிக்க ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்தலாம். புதிய மசோதா கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட்டு, சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

பிறப்பு மற்றும் இறப்பை முறையாக பதிவு செய்வதன் மூலம் நாட்டின் மக்கள் தொகை, வயது வரம்பு ஆகியவற்றை பிழை இல்லாமல் கணக்கிட முடியும். இந்த வரைவு மசோதா தொடர்பாக கடந்த ஆண்டே மாநிலங்களிடம் பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களை அடிப்பையாக் அகொண்டே இந்த சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்துள்ளதாகவும் கூறியுள்ளது