இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகள், NBFCகள், ஹோம் பைனான்ஸ் அமைப்புகள், ARCகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து பதிவு செய்யப்பட்ட நிதி சேவை அமைப்புகளுக்கும் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதாவது, கடன் தொகையை முழுவதுமாக கட்டி முடித்த பிறகு, அந்தத் தேதியில் இருந்து 30 நாளுக்குள் வாடிக்கையாளர்களிடம் பெற்ற ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

அப்படி ஒப்படைக்கவிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனம், தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000 வீதம் கணக்கிட்டு இழப்பீடு தர ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை டிச.1 முதல் அமலுக்கு வருகிறது. வீட்டுக் கடன் மட்டுமின்றி, கல்விக் கடன்கள் போன்றவற்றிற்கும் இந்த உத்தரவு பொருந்தும்