கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை மாணவ மாணவிகளை ஏற்றி கொண்டு பள்ளிக்கூட பேருந்து கன்னியாகுமரி ரயில் நிலைய சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்ததால் டிரைவர் வாகனத்தை உடனடியாக நிறுத்தினார். இதனால் மாணவ, மாணவிகள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதனையடுத்து டிரைவர் தீயணைப்பு சாதன கருவியை எடுத்து புகையை கட்டுக்குள் கொண்டுவர முயன்றார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்று புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் என்ஜின் பகுதியில் சில உதிரி பாகங்கள் சேதமானது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.