விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 26-ஆம் தேதி மாம்பழப்பட்டு ரோட்டில் இருக்கும் தனியார் பள்ளி அருகே இந்த மாணவன் நின்று கொண்டிருந்தார். அப்போது மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் மாணவனை தாக்கி கடத்தி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவரான விமல் ராஜ், ராகுல்ராஜ், சுசீந்திரன், எட்வின் ராஜ், வேளச்சேரியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் இணைந்து மாணவனை கடத்தி சென்றது தெரியவந்தது.

நேற்று செல்போன் சிக்னலை வைத்து மாணவனை கடத்தி சென்ற நபர்களை போலீசார் பிடித்தனர். மேலும் மாணவனையும் மீட்டனர். இதுகுறித்து போலீசார் கூறும் போது, தனியார் பள்ளியில் படிக்கும் மாணவியை அந்த மாணவன் காதலித்து வந்துள்ளார். சிறுமியின் உறவினரான ஒரு வாலிபரும், கடத்தலில் ஈடுபட்ட விமல் ராஜும் நெருங்கிய நண்பர்கள். ஒருதலை பட்ச காதல் பற்றி அறிந்ததும் மாணவனை அவர்கள் கடத்தி பிளாக்மெயில் செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.