
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது மகாத்மா காந்தி பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த 1982 ஆம் ஆண்டு காந்தி படம் எடுக்கப்பட்ட போது தான் மகாத்மா காந்தி பற்றி உலகுக்கு தெரியவந்தது. அதன்பிறகு தான் மகாத்மா காந்தி பற்றியும் அவருடைய ஆளுமையைப் பற்றியும் மக்கள் தெரிந்து கொண்டார்கள் என்று கூறினார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதற்கு தற்போது பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் மிஸ்டர் மோடி ஜி நீங்கள் பள்ளிக்கு சென்றிருந்தால் எங்கள் மகாத்மாவை பற்றி அறிந்திருப்பீர்கள். தயவுசெய்து உங்கள் whatsapp பல்கலைக்கழகத்தை தாண்டி வெளியே வாருங்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் பிரகாஷ்ராஜின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.