
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் பழைய பஸ் பாஸ் பயன்படுத்தலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் உடனடியாக பஸ் பாஸ் வழங்குவது என்பது சாத்தியமில்லை என்பதால் மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மற்றும் பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தி அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.