மராட்டிய மாநிலம் புனேவில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பேசும் பொருளாக மாறி உள்ளது. அதாவது கூட்டமான ஒரு பேருந்தில் பயணி ஒருவர் குடிபோதையில் ஏறுகிறார். அந்த நபர் ஒரு பெண்ணை தகாத முறையில் தொட முயற்சி செய்கிறார். இதனால் அந்த பெண் ஆத்திரத்தில் அந்த நபரை கன்னத்தில் அடித்தார். சக பயணிகள் தடுக்காத நிலையில் தொடர்ந்து அந்த பெண் தன் ஆவேசம் தீர அவரை கன்னத்தில் 26 முறை அறைந்தார்.

இறுதியில் அந்த நபர் மன்னிப்பு கேட்ட நிலையில் கடைசியாக பேருந்து நடத்துனர் இந்த விவகாரத்தில் தலையிட்டு அதன் அவரை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கூறினார். பின்னர் அந்த நபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் ஒரு பெண் துணிச்சலாக தன்னுடைய பாதுகாப்புக்காக அந்த நபரை கன்னத்தில் அறைந்தது பாராட்டுக்குரிய விஷயம் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Suresh Kumar (@isureshofficial)