
பஞ்சாப் மாநிலத்தில் தாலவாண்டி பகுதியில் இருந்து பதிண்டா நோக்கி இன்று ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்த நிலையில் ஒரு பாலத்தின் மீது சென்றது. அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் எதிர்பாரத விதமாக பேருந்து பாலத்தில் இருந்து ஓடையில் கவிழ்ந்து பெரும் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சுமார் 8 பேர் உயிரிழந்த நிலையில் 40-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வரும் நிலையில் பாலத்தில் தடுப்புகள் எதுவும் இல்லாததால் கூட விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.