
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை செல்போன் பயன்பாடு என்பது அதிகமாக இருக்கிறது. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் வெளியாகும் வீடியோக்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது எனலாம். இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ மிகவும் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது.
அதாவது அந்த வீடியோவில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை பெய்து கொண்டிருக்கிறது. அப்போது ஒரு நாய் ஒன்று அந்த மழையில் படுத்து கொண்டிருந்தது. திடீரென காற்று வீசியபோது அங்கிருந்த ஒரு விளம்பரப் பலகை சரிந்து விழுந்தது. அந்த நாய் அந்த விளம்பர பலகையின் கம்பியை பிடித்த நிலையில் உடனே காற்றில் பறந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக கம்பியை கெட்டியாக பிடித்துக் கொண்ட நாய் நைசாக கீழே விழுந்தது. இதனால் காயம் இன்றி நாய் உயிர் தப்பியது. மேலும் இது குறித்தான வீடியோவுக்கு பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram