கேரள ஆலப்புழாவில் உள்ள வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதனால், கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதிகளான 12 சோதனைச் சாவடிகளில் சிறப்பு கால்நடை பராமரிப்புத் துறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அந்த வழியாக வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

பறவைக் காய்ச்சல் பண்ணைக் கோழிகள் மட்டுமல்லாமல், வீட்டில் வளர்க்கப்படும் கோழிகளுக்கும் எளிதாக பரவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கோழிகள் மூலமாக தான் இந்த காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுகிறது. பறவைக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் அனைத்தும் சாதாரண சளி, காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறிகளுடன் ஒத்துப்போகின்றன. அதாவது. இருமல், வயிற்றுப்போக்கு, மூச்சுத் திணறல், தலைவலி, தசை வலி, தொண்டை வலி போன்றவை தான்.