திருவண்ணாமலையில் பிறந்து, கர்நாடகாவில் ஆன்மிகப் பயணம் தொடங்கி, இன்று ‘கைலாசா’ என்ற தனித் தீவில் வசிப்பதாகக் கூறப்படும் நித்யானந்தா, பல சர்ச்சைகளுக்குப் பிறகு மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். பாலியல் புகார்கள் மற்றும் கடத்தல் வழக்குகளால் இந்தியப் போலீசாரால் தேடப்பட்டு வரும் இவர், வெளிநாட்டில் தலைமறைவாக இருந்துகொண்டு அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இடையில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், அவர் டயாலிசிஸ் சிகிச்சையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

​இந்நிலையில், 2026-ம் ஆண்டு பிறப்பையொட்டி தனது எக்ஸ் (X) தளத்தில் அவர் ஒரு புதிய செய்தியைப் பகிர்ந்துள்ளார். அதில், “சாட்சி பாவம்” என்ற தத்துவத்தைக் குறிப்பிட்டும், அனைத்தையும் சாட்சியாகப் பார்த்தால் இந்தப் புத்தாண்டு உங்களுக்கு ஒரு புதிய பிறவியாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். “பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம்” என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்தச் செய்தி, சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.