
திருப்பூர் மாவட்டம் கரைப்புதூர் பகுதியில் தனியார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மயக்கமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாய கழிவு நீர் தொட்டியை பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சுத்தம் செய்ய முயன்ற போது விஷவாயுத்தாக்கி அசம்பாவிதம் நடந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.