காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராடிவரும் நிலையில் தற்போது விஜய் மக்களை சந்திக்க ஏகனாபுரம் சென்றுள்ளார். நடிகர் விஜய் வீனஸ் திருமண மண்டபத்தில் பொதுமக்களை சந்திக்கும் நிலையில் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு மட்டும் தான் அனுமதி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தினர் பலரும் அங்கு வரும் நிலையில் அவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. அதாவது தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வெளி நபர்களுக்கு அங்கு செல்ல அனுமதி கிடையாது என்று  போலீசார் திட்டவட்டமாக கூறிவிட்டனர். மேலும் அனுமதிச்சீட்டு வாங்கியவர்கள் மட்டும்தான் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த இடமும் போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நாள் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது ‌