சமூக வலைத்தளங்களில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி, தற்போது மீண்டும் இன்ஸ்டாகிராமில் பயங்கரமாக டிரெண்டாகி வரும் ஒரு ‘பிராங்க்’ (Prank) வீடியோ, பார்ப்போரை அதிர்ச்சியிலும் பெரும் அதிருப்தியிலும் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பெரிய சூட்கேஸிற்குள் சிறுமி ஒருத்தியின் கை மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அந்தப் பெட்டியை வைத்திருக்கும் நபர், “இந்த சூட்கேஸ் மிகவும் கனமாக இருக்கிறது, காரில் எடுத்து வைக்க உதவுங்கள்” என்று சாலையில் செல்வோரிடம் உதவி கேட்கிறார். அப்போது அங்கு வரும் இருவர் அவருக்கு உதவ முன்வருகின்றனர். ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த சூட்கேஸைத் திறந்து பார்க்கும்போது உள்ளே ஒரு குழந்தை இருப்பதை அவர்கள் கவனிக்கிறார்கள். வழக்கமாக இப்படி ஒரு சூழலில் மக்கள் பயந்து ஓடுவார்கள் அல்லது குழந்தையைக் காப்பாற்ற முயல்வார்கள். ஆனால், இந்த வீடியோவில் வந்த இருவரோ, எவ்வித பயமும் இன்றி, அந்த நபருக்குக் குழந்தையைக் கடத்துவதற்குச் சர்வ சாதாரணமாக உதவி செய்து அந்தச் சூட்கேஸை காரில் ஏற்றி வைக்கின்றனர்.
உள்ளே ஒரு குழந்தை உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பது தெரிந்தும், கடத்தல்காரன் தங்களைத் தாக்கிவிடுவான் என்ற பயம் கூட இல்லாமல், அவர்கள் மிகவும் இயல்பாக அவனுக்குத் துணை போனது பார்ப்பவர்களைப் பதற வைத்துள்ளது. இவர்களின் முகத்தில் சற்றும் பயமோ, பதற்றமோ அல்லது ஒரு குழந்தையின் மீதான இரக்கமோ இல்லாததைக் கண்ட நெட்டிசன்கள், “ஒருவேளை இவர்கள் ஏற்கனவே இதுபோன்ற குழந்தை கடத்தல் கும்பலில் பின்னணியாக இருக்கும் நபர்களாக இருக்குமோ?” என்ற பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். நெட்டிசன்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோ பழையதாக இருந்தாலும், இதில் இருக்கும் நபர்களின் அமானுஷ்யமான செயல்பாடு சமூகப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, இந்த வீடியோவில் இருக்கும் நபர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளவாசிகள் தங்களது கருத்துக்களை வலுவாகப் பதிவு செய்து வருகின்றனர்.<
View this post on Instagram
/p>
