நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் விமர்சையாக நடைபெற்றது. சமீபத்தில் எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவிலும் விஜய் கலந்து கொண்டார். அப்போது வேங்கைவயல் மற்றும் மணிப்பூர் சம்பவம் பற்றி பேசி மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்தார். அவரது அரசியல் வருகை தமிழ்நாடு அரசியல் களத்தில் திருப்புமுனையாக அமைந்துள்ளது. விஜயின் பேச்சுக்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். விஜய் மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்துள்ளார்.

சமீபத்தில் கூட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் வரவழைத்து நிவாரண உதவி வழங்கினார். இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சமீபத்தில் கூறியதாவது, சங்கி என ஸ்டாம்ப் குத்தி விடுவார்கள் என அச்சத்தில் நடிகர் விஜய் மத்திய அரசை விமர்சிக்கிறார். மழைக்கு கூட வெளியில் வராதவர் விஜய். அவர் எங்களை பார்த்து கேள்வி கேட்பது வேடிக்கையாக உள்ளது. மணிப்பூருக்கு வியை அழைத்துச் செல்வதாக அண்ணாமலை கூறியிருக்கிறார். மக்கள் மீது அவருக்கு கவலை இருந்தால் அங்கு செல்லலாம் என தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.