பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம் நாளை முதல் ஸ்கைப் சேவை முற்றிலும் நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் வீடியோ காலின் ஆரம்பமான Skype சேவையை முன்பு பலரும் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது ஜூம் மற்றும் whatsapp வீடியோ கால் என பல புதிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டதால் ஸ்கைப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

இதனால்தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த சேவையை நிறுத்துகிறது. கடந்த 2003 ஆம் ஆண்டு 4 சாப்ட்வேர் இன்ஜினியர்களால் ஸ்கைப் இணையதளம் உருவாக்கப்பட்ட நிலையில் அதனை கடந்த 2011 ஆம் ஆண்டு 8.5 மில்லியன் டாலர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கியது.

கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத நிலவரப்படி 30.6 கோடி பேர் நாள்தோறும் ஸ்கைப் தளத்தை பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் திடீரென ஸ்கைப் சேவையை மூடுவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.