
உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்துகிறார்கள். whatsapp செயலி என்பது பயனர்களின் தகவல் பரிமாற்றத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. இதன் காரணமாக மெட்டா நிறுவனம் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மெட்டா நிறுவனம் ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியாவில் விமான டிக்கெட் நிலவரம் உள்ளிட்ட வர்த்தக சேவை செய்திகள் மூலம் தனியார் நிறுவனங்கள் 2500 கோடி ஈட்டுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் whatsapp க்கு மட்டும் 39 சதவீதம் கிடைக்கிறது.
இதன் காரணமாக இனி whatsapp பயனாளர்களுக்கு இந்த சேவை இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரை செலுத்தி வந்த 29 காசுகள் கட்டணத்தை பயனர்கள் செலுத்த வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தற்போது whatsapp செயலியில் மற்றொரு புதிய அம்சமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது யாராவது இனி உங்களுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினால் அதனை எழுத்து வடிவில் படித்துக் கொள்ளலாம். சில சமயங்களில் வாய்ஸ் மெசேஜ் தெளிவாக இருக்காது. எனவே அப்படி வாய்ஸ் மெசேஜ் வந்தால் அதனை நீங்கள் எடுத்து வடிவில் மாற்றி படித்துக் கொள்ளலாம். மேலும் இதற்காக நீங்கள் whatsapp செட்டிங்ஸில் chat பகுதியில் சென்று சில மாற்றங்களை செய்ய வேண்டும்.