
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் இருந்து அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை மாரியப்பன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்த நிலையில் பேருந்தை இயக்கி கொண்டிருந்த போதே மாரியப்பனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனால் மாரியப்பன் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு இருக்கையிலேயே மயங்கி சரிந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நடத்துநர் பொதுமக்கள் உதவியோடு மாரியப்பனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாரியப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.