இந்திய ரிசர்வ் வங்கி நாட்டில் புழக்கத்தில் உள்ள அனைத்து 2000 ரூபாய் நோட்டுகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக கடந்த மே மாதம் அறிவித்து இருந்தது. இந்நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் அதற்கான காலக் கெடு நிறைவடைவதால், அதன்பின் அந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதை அறிய முடிகிறது. செப்டம்பர் 29ஆம் தேதி வங்கிகள் விடுமுறை என்பதால் இன்னும் 3 வேலை நாட்கள் மட்டுமே உள்ளன.

2000 ரூபாய் நோட்டுக்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் வரும் 28 ஆம் தேதி முதல் அரசுப்பேருந்துகளில் பயணிகளிடம் 2000 ரூபாய் நோட்டுகளை பெறக்கூடாது என்று நடத்துனர்களுக்கு தமிழக போக்குவரத்து கழகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி பயணிகளிடம் 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றால் அதற்கு நடத்துனர்கள் பொறுப்பு என்று அறிவித்துள்ளது.