
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள பள்ளி விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது பத்தாம் வகுப்பு மாணவர்கள் 12-ஆம் வகுப்பு மாணவனை சரமாரியாக தாக்கினர். இதனால் 12-ஆம் வகுப்பு மாணவனின் காது கிழிந்து துண்டான நிலையில் ரத்தம் வடிந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் அந்த மாணவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தவர். இந்த விவகாரத்தை விடுதி நிர்வாகம் மறைக்க முயன்றதாக தெரிகிறது. இதுகுறித்து மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.