வெளிநாடுகளில் பேய்களுக்காக ஹாலோவின் என்ற திருவிழா கொண்டாடப்படும். இது அங்கு மிகவும் பிரபலமாக இருக்கும் நிலையில் இந்த விழாவை முன்னிட்டு தற்போது இந்தியாவில் அதுவும் தலைநகர் டெல்லியில் ஒரு பெண் பேய் வேடம் அணிந்து உலா வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹாலோவி ன் திருவிழாவின்போது பேய் வேடம் அணிந்து மக்கள் அதனை கொண்டாடுவார்கள். அந்த வகையில் டெல்லியில் இந்த திருவிழாவை கொண்டாடும் விதமாக ஒரு பெண் கொடூரமான பேய் வேடம் அணிந்து தெருக்களில் உலா வந்தார்.

அந்தப் பெண்ணின் பெயர் சைபாலி கேக்பால். இவர் கொடூரமான பேய் போன்று மேக்கப் அணிந்ததோடு கண்களில் லென்ஸ் பொருத்தியுள்ளார். அவர் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் உலா வந்த அந்த பெண் குழந்தைகள் மற்றும் பெண்களை பயமுறுத்த முயற்சி செய்கிறார். அவரை அங்கிருந்தவர்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலர் லைக்குகளை குவித்தாலும் பலர் கண்டனங்களை தெரிவிக்கிறார்கள்.

https://www.instagram.com/reel/DBvr4WIRBEB/?utm_source=ig_embed&utm_campaign=loading