சீனாவில் உள்ள Guangzhou இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆச்சர்யமான விஷயத்தை  கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஒரு பன்றியின் உடலில் மனித சிறுநீரகம் வெற்றிகரமாக வளர்க்கப்பட்டுள்ளது. பன்றி செல்கள் மற்றும் மனித உயிரணுக்களின் கலவையால் உருவாக்கப்பட்ட சிறுநீரகம் 28 நாட்களுக்குப் பிறகு மனித சிறுநீரகமாக மாறியது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மனித உறுப்பு மாற்று சிகிச்சைக்கான தேவை அதிகரித்து வருவதால், மற்ற உயிரினங்களிலிருந்து உறுப்புகளை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மனித மற்றும் விலங்கு செல்கள் இரண்டையும் கொண்ட ஒரு திடமான மனிதமயமாக்கப்பட்ட உறுப்பு, மற்றொரு விலங்கு இனத்திற்குள் வளர்க்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.