
2024 ஐ.பி.எல்., தொடரின் இறுதிப்போட்டிக்கான Qualifier 1 சுற்றில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற KKR அணி முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் நுழைந்துள்ளது. இதனையடுத்து 2024 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கான Eliminator சுற்றில் RR – RCB அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் RR 13 முறையும், RCB 15 முறையும் வென்று இருக்கின்றன. இரு அணியிலும் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன்கள் அணிவகுத்து நிற்பதால் அகமதாபாத்தில் உள்ள மோடி ஸ்டேடியத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்நிலையில் மிட்ச்செல் ஸ்டார்க்கை சுமார் ரூ.24 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது KKR. ஆனால், அவர் நேற்றுவரை பெரிதாக சோபிக்கவில்லை. இதுகுறித்த விமர்சித்த முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த், அவரது பந்துகள் நாலா பக்கமும் பறக்கப் போகிறது என்றார். ஆனால், ப்ளே -ஆஃப் சுற்றில் ஸ்டார்க் அபாரமாக விளையாடுவார் என்று கணித்தார் அநிருத். அதேபோன்று, நேற்றைய குவாலிஃபையர் போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார் ஸ்டார்க்.