பிரபல அணு விஞ்ஞானி சீனிவாசன் இன்று உடல்நல குறைவால் காலமானார். அதாவது Atomic energy commission முன்னாள் தலைவர் M.R. சீனிவாசன். இவருக்கு 95 வயது ஆகும் நிலையில் இன்று ஊட்டியில் உடல் நலக்குறைவால் காலமானார். இவர் கடந்த 1955 ஆம் ஆண்டு ஹோமி பாபா உடன் இணைந்து நாட்டின் முதல் அணுசக்தி ரியாக்டரை உருவாக்கினார்.

அதன் பின்பல முக்கிய பொறுப்புகளை வகித்த இவர் கடந்த 1987 ஆம் ஆண்டு AEC தலைவராக நியமிக்கப்பட்டார். நாட்டுக்காக இவர் ஆட்சிய சேவைகளை கௌரவிக்கும் விதமாக மத்திய அரசாங்கம் கடந்த 2015 ஆம் ஆண்டு சீனிவாசனுக்கு பத்மவிபூஷன் விருது வழங்கியது. மேலும் இவரது மறைவுக்கு தற்போது பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.