கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு அதிக கன மழை காரணமாக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று திருவனந்தபுரம், இடுக்கி மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலட் கொடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட பத்தனம்திட்டாவில் கார்த்திகை மாதம் என்பதால் ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் தயாராக உள்ளது.

அதே போன்று அவசர மருத்துவ வசதி, தீயணைப்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பம்பை வரை அதிக மழையினால் மண் சரிவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.