ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது.

பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் மிரட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப்பிரிவு தலைவர் அகமது செரிப் சவுத்ரி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, இது கோழைத்தனமான எதிர் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. மூன்று நகரங்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு பதிலடி கொடுப்போம். பதிலடிக்கான நேரம், இடத்தை பாகிஸ்தான் முடிவு செய்யும் என கூறியுள்ளார்.