கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் என 46 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்து பதில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்து இருந்தது. இந்நிலையில் பாகிஸ்தானில் இருக்கும் தலிபான்கள் பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர்.

அது மட்டும் இன்றி எல்லையிலும் தலிபான்களும் பாகிஸ்தான் ராணுவமும் துப்பாக்கி சூடு நடத்தி மோதிக்கொண்டனர். இதில் 19 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இது தற்போது இரண்டு நாடுகளுக்கு இடையே பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.