பெங்களூரு கோரமங்கலா பகுதியில் நடந்த ஒரு விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஏற்பட்ட இந்த துயர சம்பவத்தில், ஓர் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் மரத்தடியில் சிக்கி உயிரிழந்தார்.

இந்த கோர சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில், ஒரு பெரிய மரம் திடீரென சாலையின் நடுவே முறிந்து, அந்த மோட்டார் சைக்கிள்மீது விழும் காட்சி தெளிவாக காணப்படுகிறது.

இதனால் ஓட்டுனரும், பின்னால் அமர்ந்திருந்த நபரும் கீழே விழுந்தனர். அப்போது அருகில் வந்த ஒரு டெலிவரி வண்டி ஓட்டுனர் வினாடியில் பிரேக் போட்டு உயிர்தப்பினார் என தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த இருவரும் உடனடியாக பெங்களூரு செயிண்ட் ஜான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் ஓட்டுனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.