சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் சிறுத்தை ஒன்று திடீரென ஒரு பெண்ணைத் தாக்குகிறது. சாலையோரம் ஸ்கூட்டருடன் நின்றுகொண்டிருந்த அந்தப் பெண்ணை நோக்கிப் புதருக்குள் இருந்து பாய்ந்து வந்த சிறுத்தையைக் கண்டு இணையவாசிகள் அதிர்ச்சியடைந்தனர்.
ஆனால், அந்தப் பெண் சற்றும் பயப்படாமல் தனது கையில் இருந்த ஹெல்மெட்டை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி சிறுத்தையைத் திருப்பித் தாக்கியுள்ளார். அந்தப் பெண்ணின் துணிச்சலான பதிலடியைக் கண்டு சிறுத்தை மீண்டும் காட்டுக்குள்ளேயே ஓடி மறைந்தது. ஆபத்தான நேரத்தில் அவர் காட்டிய மனஉறுதி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இருப்பினும், இந்த வீடியோ உண்மையானது அல்ல என்றும், இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஒன்று என்றும் கூறப்படுகிறது. எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளதோடு, “இது போன்ற சூழலில் சிக்கினால் என்ன செய்வது?” எனப் பலவாறாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
जंगल मे अकेली लड़की ….और अचानक लेपर्ड का हमला !
लेकिन हिम्मत अगर दिल मे हो तो मौत भी रास्ता बदल लेती है, देखिये कैसे सूझबूझ और बहादुरी से उसने अपनी जान बचाई pic.twitter.com/w82mbhgFHx
— कल्पना श्रीवास्तव 🇮🇳 (@Lawyer_Kalpana) February 21, 2026
“>
பார்ப்பதற்கு மிகவும் தத்ரூபமாக இருந்தாலும், இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ எனத் தெரிந்த பிறகு பலரும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
