தற்பொழுது ஆன்லைன் மூலமாக பணப்பரிவர்த்தனைகள் தொடங்கிவிட்ட நிலையில் பண மோசடிகளும் அதிகரித்து விட்டது. இது போன்ற மோசடிகளில் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்காக முதலில் வங்கி சம்பந்தப்பட்ட விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. மேலும் செல்போன் எண்ணுக்கு தேவையின்றி வரும் எந்த செய்தியையும் நம்பி அதை கிளிக் செய்து பார்க்க கூடாது.

இவ்வாறு கிளிக் செய்தால் வங்கியில் இருக்கும் பணம் அனைத்தும் திருடு போக வாய்ப்பு இருக்கிறது. மேலும் வங்கியின் மூலம் ஏதேனும் செய்தி அனுப்பினால் VM- ICICI Bank, AD- ICICIBN, JD- ICICIBK  என்கிற வடிவில் மட்டுமே இருக்கும். அதுபோக பணம் திருடப்படும் நோக்கில் உங்களுக்கு அனுப்பப்படும் செய்தியில் பெரும்பாலும் பிழைகள் இருக்கும். அதை வைத்து எளிதில் போலியான செய்திகளை கண்டுபிடித்து விடலாம். எனவே தேவையில்லாமல் வரும் லிங்கை தொட்டு பணத்தை இழக்காமல் கவனமாக இருக்க வேண்டும்.