
மத்தியபிரதேச மாநிலம் நர்சிங்பூர் பகுதியில் சந்தியா சவுத்ரி என்ற 18 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். நர்சிங் மாணவியான இவர் தொழிற்கல்வி படித்து வந்துள்ளார். இந்த மாணவி நேற்று அவசர சிகிச்சை பிரிவில் ஹாஸ்பிடலில் பணியில் இருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென மாணவியை தாக்கிய நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்து மாணவியை கழுத்தை வெட்டி கொலை செய்தார். அந்த ஹாஸ்பிடலில் 100-க்கும் மேற்பட்டோர் இருந்த நிலையில் ஒருவர் கூட மாணவியை காப்பாற்ற முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பட்டப்பகலில் நடைபெற்ற நிலையில் அங்கிருந்த ஒருவர் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட தற்போது அது மிகவும் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் மாணவியை கொலை செய்த வாலிபர் தற்கொலை முயற்சி செய்த நிலையில் அது தோல்வியடைந்ததால் பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியை கொலை செய்தது அவரது காதலன் அபிஷேக் என்பது தெரிய வந்தது.
இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். மேலும் இதில் ஏற்பட்ட பகை காரணமாக தான் அவர் மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.