ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய் சால்மர் பகுதியில் ஒரு பிரபலமான சுற்றுலா தளம் அமைந்துள்ளது. இந்த சுற்றுலா தளத்தை ஒரு ஜோடி சுற்றி பார்ப்பதற்காக வந்திருந்த நிலையில் அவர்கள் தங்களது காரை ஒரு ஓரமாக நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு முதியவர் அவர்களிடம் வந்து பேச்சு கொடுத்தார். அப்போது கார் ஓட்டிக் கொண்டிருந்த வாலிபர் அந்த முதியவரை தனது அருகில் வருமாறு அழைத்த நிலையில் அவரும் அருகில் வந்தார். அப்போது பின்பக்க சீட்டில் ஒரு பெண் நிர்வாண நிலையில் இருந்தார். அப்போது அந்த முதியவரிடம் வாலிபர் இந்த பெண் பார்க்க அழகாக தெரிகிறாரா.? இந்தப் பெண்ணை தொட்டு பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா என்று கேட்டுள்ளார்.

இந்த முதியவர் மறுப்பு தெரிவித்த நிலையிலும் அந்த வாலிபர் கட்டாயப்படுத்தி அந்த பெண்ணை தொட வைத்தார். இந்த காட்சியை அந்த வாலிபர் தன் செல்போனில் வீடியோவாக பதிவு செய்த நிலையில், பின்னர் அந்த ஆடு மேய்க்கும் நபர் பெண்ணுடன் இருந்த வீடியோவை வேறுவிதமாக எடிட் செய்து ஆபாச தளத்தில் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோவில் பெண்ணின் முகம் சரிவர தெரியாத நிலையில் முதியவரின் முகம் மட்டும் நன்றாக தெரிந்துள்ளது. இது இணையத்தில் வைரலான நிலையில் ஜெய் சால்மர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் அந்த பெண் தன்னுடைய சோசியல் மீடியா கணக்கில் இருந்த புகைப்படங்களை நீக்கிவிட்டு கணக்கையும் நீக்கிவிட்டார். இருப்பினும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி அந்த பெண்ணை உத்திரபிரதேசத்தில் வைத்தும், வாலிபரை பீகாரில் வைத்தும் கைது செய்தனர். இவர்கள் இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் மிகவும் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருவதோடு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள்.