நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் தனி நபர் வருமான வரி வரம்பில் நீண்ட காலத்திற்கு பின் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்தார். பட்ஜெட் குறித்து விளக்கமளித்த அவர், அனைத்து பிரிவு மக்களையும் கவனத்தில் கொண்டு பட்ஜெட் உருவாக்கப்பட்டது. புதிய வருமான வரி முறைக்கு மாறும்படி யாரையும் வற்புறுத்தவில்லை. விலக்குகள் காரணமாக புதிய வரிமுறை இப்போது கவர்ச்சிகரமானதாக உள்ளதாக அவர் கூறினார்.