சாதாரணமாகப் பாம்புகளைப் பார்த்தாலே பயப்படும் நிலையில், சுமார் 21 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பை (Python) ஒருவர் தைரியமாகப் பிடிக்கும் காணொளி இப்போது வைரலாகி வருகிறது. இந்தக் காணொளியில், அந்த நபர் பாம்பைப் பிடிக்க முயலும்போது, அது அவரைத் தாக்கியது. எனினும், அந்த மனிதர் விடாப்பிடியாகப் போராடி, இறுதியில் அதன் வாயைப் பிடித்து, அந்தப் பாம்பைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.
இந்தச் சாகசக் காட்சியை இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இது உண்மையில் மனிதர்களை உண்ணும் (ஆட்கொல்லி) வகைப் பாம்பு என்றும், இதுபோன்ற சண்டைகள் ஏற்கெனவே நடந்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்றும் காணொளியைப் பகிர்ந்தவர் தெரிவித்துள்ளார். இந்த ஆபத்தான சாகசத்தைப் பார்த்த பலரும் அந்த மனிதரின் துணிச்சலைப் பாராட்டியும், சிலர் பயந்தும் கருத்து தெரிவித்துள்ளனர்.
