சென்னை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நேற்று திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பூந்தமல்லியில்  உள்ள ஈ.வி.பி. திரையரங்கம் சந்தோஷ் திரையரங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென வீசிய சூறைக்காற்றால் சந்தோஷ் திரையரங்கத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

அப்போது படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் கூரை இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. இதனையடுத்துரசிகர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.